அரியலூர் நகைக்கடை கொள்ளை சம்பவம் எதிரொலி: குற்றத்தடுப்பு தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்.!அரியலூரில் நகைக்கடையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதன் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த போலீசார் கடை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

புதுக்கோட்டை டவுன் உட்கோட்ட போலீஸ் நிலையங்களின் எல்லை பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், அடகு கடைகள், தேசிய வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் குற்றத்தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்றது. 

கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். டவுன் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசும்போது, நகைக்கடைகளில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து இருக்க வேண்டும். 

கடையை இரவில் பூட்டிச்செல்லும்போது, கண்காணிப்பு கேமராக்களை இயங்க விடாமல் அணைக்க கூடாது. தொடர்ந்து செயல்பாட்டிலேயே இருக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா நமக்கு 3-வது கண் போன்றது. திருட்டு மட்டுமல்லாமல் வேறு எந்த குற்றசம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கவும் கண்காணிப்பு கேமரா உதவுகிறது. அனைத்து நகைக்கடைகள், அடகு கடைகள், வணிக கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்தி இருக்க வேண்டும் என்றார். 

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன் (டவுன்), அழகம்மாள் (கணேஷ்நகர்) மற்றும் போலீசார், நகைக்கடை உரிமையாளர்கள், சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments