புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவ சங்க நிர்வாகிகளுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில், மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க கூடாது. இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது. கடலுக்குள் செல்லும்போது கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மழை காலங்களில் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில் மீன்வள உதவி இயக்குனர் குமரேசன், மணமேல்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ், கடல் அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.