மணமேல்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி.!மணமேல்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில், வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் ஆதிசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மணமேல்குடி பகுதியை சேர்ந்த 25 விவசாயிகளுக்கு நெல் விதை 25 கிலோ, நெல் நுண்சத்து 125 கிலோ, திரவ உயிர் உரம் 2 லிட்டர், சூடோமோனஸ் 25 கிலோ ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் தேசிய உணவு பாதுகாப்பு ஆலோசகர் திருப்பதி, வேளாண்மை அலுவலர் முனியையா, துணை வேளாண்மை அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் செய்திருந்தினர்.


Post a Comment

0 Comments