புதுக்கோட்டையில் தனியார் பஸ்கள் ஓடாது.! மாவட்ட தனியார் பஸ் ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்க தலைவர் தகவல்.!



தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அமலானது. பின்னர் ஒவ்வொரு மாத இறுதியிலும் கள நிலவரம் குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினரிடம் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து அறிவித்து வருகிறது.


அதன்படி 7-வது கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் புதிய தளர்வுகளை அறிவித்தார். இதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பஸ் ஓட்டுனர்கள் போக்குவரத்தை இயக்க முன்வரவில்லை.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட தனியார் பஸ் ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்க தலைவர் புஷ்பராஜ் தெரிவித்ததாவது:- தனியார் பஸ் இயக்குவது குறித்து மாநில சங்கத்தின் மூலம் காணொலி காட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனியார் பஸ் தற்போது இயக்கவில்லை.

தற்போதைய சூழலில் தனியார் பஸ்கள் மாவட்டத்திற்குள் மட்டுமே ஓட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. பெர்மிட்டில் உள்ளபடி வெளிமாவட்டத்திற்கு ஓட்ட அனுமதி இல்லை என்பதால் பஸ் இயக்குவதில் பல நடைமுறை சிக்கல் உள்ளது. மேலும் 60 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் ஊரடங்கு காலத்தில் பஸ்கள் இயக்கப்படாத ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு சாலை வரி செலுத்தியுள்ளோம். இதனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். எனவே தற்போது அறிவித்துள்ள கட்டுப்பாட்டின்படி தனியார்கள் பஸ்களை இயக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments