சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி மீமிசலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.!10 ஆண்டுகள் நிறைவு செய்த வாழ்நாள் சிறைவாசிகள் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மீமிசல் கடை வீதியில் 08.09.2020 அன்று மாலை 4.30 மணியளவில் மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் B.சேக் தாவூதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில மீனவரணி செயலாளர் ஜெகதை செய்யது அவர்கள் மற்றும் மமக ஒன்றிய செயலாளர் வகாப் அவர்கள் முன்னிலை வகித்தார்.

சமூக நீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட துணை செயலாளர் A.நவாஸ் கான் மற்றும் IPP மாவட்ட செயலாளர் பகுர்தீன் அலி காஸிமி அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்கள்.

ஆர்.புதுப்பட்டினம் கிளை செயலாளர் முஸ்தாக் மற்றும் கோபாலப்பட்டினம் கிளை செயலாளர் ஆயத்துல்லா அவர்கள் கண்டன கோஷமிட்டனர்.

இறுதியாக SMI மாவட்ட பொருளாளர் முபாரக் அவர்கள் நன்றியுரையாற்றினார். இதில் 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.Post a Comment

0 Comments