மணமேல்குடி அருகே அந்தோணியார்புரத்தில் போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு.!மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள பதிவேடுகள் தளவாட பொருட்களை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து அந்தோணியார்புரம் மீனவ கிராமத்திற்கு சென்று மீனவர்களிடம் கொரோனா வைரஸ், போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து இளைஞர்களிடம் போதைப்பொருட்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை விளக்கமாக எடுத்து கூறினார்.

பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. இந்த ஆய்வின்போது மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உடன் இருந்தனர்.


Post a Comment

0 Comments