மீமிசல் கொரோனா பரிசோதனை முகாமில் துணை ஆட்சியர் வட்டாட்சியர் ஆய்வு.!புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதிகளில் துணை ஆட்சியர்,வட்டாட்சியர் கொரோனா விழிப்புணர்வு ஆய்வு நடத்தியதில் பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதித்தனர்.

மீமிசல் காவல் நிலையத்திற்கு முன்பாக கிழக்கு கடற்கரை சாலையில் முகக் கவசம் அணியாமல் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்தப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனை முகாமில் 136 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 

அறந்தாங்கி உதவி ஆட்சியர் மேற்படி முகாமினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு தொற்று குறித்து அறிவுரை வழங்கினார்.ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் இ.பரணி தலைமையில் அரசு விதித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றாது முகக் கவசம் அணியாது வந்த நபர்களுக்கு 200 ரூபாய் என அபராதம் விதிக்கப்பட்டு 22 நபர்களுக்கு 4400 ரூபாய் அபராதம்  விதிக்கப்பட்டது .மேலும் அரசு விதியை பின்பற்றாத 8 கடைகளுக்கு ரூ.8000 அபராதம் விதிக்கப்பட்டது.


Post a Comment

0 Comments