மீமிசல் பகுதி கிராம நிர்வாக அதிகாரியிடம் தகராறு செய்தவர் கைது.!மீமிசல் பகுதி கிராம நிர்வாக அதிகாரியிடம் தகராறு செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதி கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் பிரபு (வயது 35). இவர், சம்பவத்தன்று அலுவலகத்தில் இருந்தபோது புதுப்பட்டினத்தை சேர்ந்த சரவணன் (40) என்பவர் அவரிடம் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து மீமிசல் போலீசில் பிரபு கொடுத்த புகாரின்பேரில், சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Post a Comment

0 Comments