வெடி விபத்தில் 200 பேரை பலி கொண்ட பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீ விபத்து! வான் நோக்கிப் பரவிய கரும்புகை...





வெடி விபத்தில் 200 பேரை பலி கொண்ட பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீ விபத்து! வான் நோக்கிப் பரவிய கரும்புகை... 

கடந்த மாதம் லெபனான், பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பெரும் விபத்தின் தாக்கத்திலிருந்து லெபனான் மக்கள் மீண்டுவருவதற்குள் மீண்டும் அதே துறைமுகத்தில் ஏற்பட்டிருக்கும் தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்திலுள்ள கிடங்கு ஒன்றில் சேமித்துவைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் கடந்த 4-ம் தேதி வெடித்துச் சிதறியது. இதில், சுமார் 190 பேர் உயிரிழந்த நிலையில், 6,000-த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், அந்தப் பகுதியிலிருந்த கட்டடங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. சுமார் 30,000 பேர் இந்த விபத்தால் தங்கள் வீடுகளை இழந்தனர்.

இந்தச் சம்பவம் நடந்து 40 நாள்கள்கூட ஆகாத நிலையில், இன்று மீண்டும் அதே துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. பெய்ரூட் துறைமுகத்திலுள்ள டயர் மற்றும் எண்ணெய் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் திடீரென தீப்பற்றிகொண்டிருக்கிறதுது. தீ விபத்தால் வான் நோக்கிக் கரும்புகை பரவியதால் அந்தப் பகுதி மக்கள் பீதியடைந்திருக்கிறார்கள்.


தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்களும் இன்னும் கண்டறியப்படவில்லை. ``தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்'' என்ற தகவலை மட்டும் லெபனான் ராணுவம் தெரிவித்திருக்கிறது.


கடந்த மாதம் லெபனான் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெரும் விபத்தின் தாக்கத்திலிருந்து லெபனான் மக்கள் மீண்டுவருவதற்குள் மீண்டும் அதே துறைமுகத்தில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை அதிகரித்திருக்கிறது.பயங்கர தீ விபத்து
 

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த மாதம் 4-ந்தேதி சுமார் 3 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட் வெடித்தது. மிகப்பெரிய இந்த வெடி விபத்தில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தின் சேதத்தில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. அதற்குள் நேற்று அங்கு மீண்டும் ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துறைமுகத்தின் ஒரு பகுதியில் டயர்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ பிடித்தது. அங்கு எளிதில் தீ பிடிக்கக்கூடிய மேலும் சில பொருட்கள் இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதனால் எழுந்த கரும்புகை துறைமுகத்தை முழுமையாக மறைத்தது. வெடி விபத்து சேதத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். துறைமுகத்தில் தீயை அணைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.


Post a Comment

0 Comments