புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மனநல ஆலோசனை பெற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்...



புதுக்கோட்டை மாவட்ட மனநலத் திட்டத்தின் சார்பில் ‘மீண்டு வருவது மனதின் சிறப்பு’ என்ற மனநல விழிப்புணர்வு காணொலி மற்றும் கையேட்டினை கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று வெளியிட்டார்.

 அதன்பின் அவர் கூறுகையில், “மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் மன கவலை நோயின் அறிகுறிகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களை கண்டறிந்து, பாதிக்கப்பட்டவருக்கு நாம் எவ்வாறு உதவ முடியும் என்பதை விளக்கும் வகையில் ஒரு நிமிட விழிப்புணர்வு காணொலிக்காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

இதனை பொதுமக்கள் அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் 104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்பவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய பின்பும் தொடர்ந்து 18 மாதங்களுக்கு 104 மனநல உதவி எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு ஆற்றுப்படுத்தும் சிகிச்சை வழங்கப்படுகிறது. 

புதுக்கோட்டை மாவட்ட மனநல ஆலோசனை மையத்தின் மூலமாகவும் மனநல ஆற்றுப்படுத்தும் சிகிச்சை வழங்கப்படுகிறது. மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை 9486067686 என்ற செல்போன் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்“என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் சரவணன், ரம்யாதேவி (காவிரி-வைகை-குண்டாறு திட்டம்) , மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments