‘நீட்‘ தேர்வுக்கு பயந்து அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்த தேர்வை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று இரவு 9 மணி அளவில் அண்ணா சிலை அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், அழகம்மாள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் தாசில்தார் முருகப்பன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரவு 10 மணி அளவில் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மாதர் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

0 Comments