புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கியில் மத்திய மாநில அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அறந்தாங்கி தபால் நிலையம் முற்றுகை போராட்டம் மனிதநேய மக்கள் சார்பாக நேற்று மாலை 4.30 மணியளவில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் A அபுசாலிகு தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது, ‘நீட்‘ தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியபடி சென்று, தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் A.கிரீன் முகமது, தமுமுக மாவட்ட செயலாளர் அரசை ஜகுபர் அலி, மாவட்ட பொருளாளர் அஜ்மல்கான், மாவட்ட துணைத்தலைவர் அப்துல் ஜலீல், மாவட்ட துணைச்செயலாளர்கள் A.ஜலீல் அப்பாஸ், புதூர் நவாஸ்கான் கட்டுமாவடி பைசல், மாநில விவசாய துணைச்செயலாளர் அஜ்மல்கான்,மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் MSK சாலிகு மற்றும் SMI நிர்வாகிகள் கலந்தர் பாஷா, முகமதுகைப் அன்வர், மாவட்ட இளைஞரணி செயலாளர், N.ஜகுபர் அலி, மமக நகர செயலாளர் K.நபீஸ் அகமது, நகர பொருளாளர் பிஸ்மி ஜமால், ஆலங்குடி நகர செயலாளர் ரஹ்மான், மணமேல்குடி ஒன்றிய பொருளாளர் முகமது ராவுத்தர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அறந்தாங்கி போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.