புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைகிறதுமாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் தற்போது சற்று குறைய தொடங்கி உள்ளது. சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோ னா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 293 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் 103 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 399 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவுக்கு தற்போது 776 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கு முன்பு சராசரியாக ஆயிரம் பேர் சிகிச்சையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓரிரு நாட்களாக வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள புள்ளிவிவரம் மூலம் இதனை அறியமுடிகிறது. ‘டிஸ்சார்ஜ்‘ அதிகரிப்பால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்தவர்கள் மற்றும் இணை நோய்க்கு சிகிச்சை பெற்றவர்கள் என மொத்தம் 118 பேர் இதுவரை இறந்துள்ளனர்.


Post a Comment

0 Comments