ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் நேரடி நெல் விதைப்பில் களை கட்டுப்பாடு மேலாண்மை



ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 16 ஆயிரத்து 625 எக்டேர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, மழை பெய்து வருவதால் களைகளும் வளர்ந்துள்ளது.

இந்த களையால் நெல்லுக்கு கிடைக்க கூடிய தண்ணீர் மற்றும் மண்ணிலிருந்து பயிருக்கு கிடைக்கக் கூடிய சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் நெல் மகசூல் 40 முதல் 55 சதவீதம் பாதிக்கப்படுகிறது. எனவே மானாவாரி நெல் பயிரில் ஒருங்கிணைந்த களை நிர்வாகம் செய்வது மிகவும் இன்றியமையாதது ஆகும். 

நெல் விதைத்து 3 முதல் 5 தினங்களுக்குள் களையை கட்டுப்படுத்திட வேண்டும். வயலில் ஈரம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் களைக் கொல்லியினை 50 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவியும் களைகளை கட்டுப்படுத்தலாம். 

மேலும் களைக் கொல்லி தெளித்த பின் 30-35-ம் நாளில் களை எடுக்க வேண்டும் மற்றும் எந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்த வயல்களில் கோனோ வீடர் கருவி மூலம் களையினை முழுமையாக கட்டுப்படுத்தி வேர் வளர்ச்சியினை, துரிதபடுத்தி அதிக மகசூல் பெறலாம். 

மேலும் விவரங்களுக்கு வட்டாரவேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ஆவுடையார் கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments