மத்திய, மாநில அரசுகளில் முழு மானியத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் கழிவறைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்ட கட்டுமானப் பொருட்கள் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் ஏராளமான ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களாக ஊராட்சிமன்றத் தலைவர்கள் இல்லாத காலத்தில் தனி அலுவலர்கள் நிர்வாகத்தில் ஊராட்சிகள் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் பயனாளிகள் பட்டியலை கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், குளமங்கலம் வடக்கு ஊராட்சிகளில் இளைஞர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்திலும், இணைய வழியாகவும் பெற்றுள்ளனர்.
அதில் சொந்த செலவில் கழிவறைகள் கட்டிய நிலையில் அரசு மானியத்தில் கட்டியவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதே போல பல வீடுகளும் கட்டப்பட்டுள்ளதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், பொது தகவல் பலகையிலும் கடந்த 3 வருடங்களாக பயனடைந்த பயனாளிகள் பட்டியலை வெளிப்படையாக ஒட்ட வேண்டும் என்று பொதுமக்களும், இளைஞர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.