நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை எதிர்த்து திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்.!



நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 5 மாதங்களுக்கு நேற்று திங்கட்கிழமை தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தொடரை செப்-14 முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வரிந்து கட்ட திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக இன்று வருகை தந்த திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் நீட் தேர்வுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய மாஸ்க்கை அணிந்தும் புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு ஆகியவற்றை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் தேர்வை கைவிட வலியுறுத்தும் பதாகைகளையும் எம்.பி.க்கள் கைகளில் ஏந்தி இருந்தனர்.


Post a Comment

0 Comments