தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர கோரி புதுக்கோட்டையில் தமஜ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.!



அனைத்துத் தோ்தல்களிலும் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே மாற வேண்டும் என வலியுறுத்தி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் எம்ஏஜெ. யூசுப்ராஜா தலைமை வகித்தாா். அக்கட்சியின் நகரச் செயலா் ஏ. முகமது யாசிா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் டி. பாண்டியன், பொருளாளா் என்எஸ்எம். நஜ்முதீன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். வாக்குச்சீட்டு முறை கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


Post a Comment

0 Comments