ஆவுடையார்கோவிலில் நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.!ஆவுடையார்கோவிலில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக மத்திய அரசை கண்டித்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பில் நீட்டுக்கு எதிராக பதாகையேந்தி அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மனோகரன் (எ) பிரபு தலைமை தாங்கினார். அறந்தாங்கி தொகுதி தலைவர் முகமது இஃப்ராகிம், தொகுதி செயலாளர் வேங்கை பழனி, தொகுதி இணை செயலாளர் பரத், ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், ஒன்றிய பொருளாளர் இராஜசிங்கம், இளையர் பாசறை செயலாளர் சிவராமன், மாணவர் பாசறை செயலாளர் எட்வின் பிரான்சிஸ், மாணவர் பாசறை இணை செயலாளர் சீனிவாசன், சுற்றுசூழல் பாசறை செயலாளர் ஜோசப் மணிமாறன் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments