மாற்றுத்திறனாளிகள் விலையில்லா உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்..!
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, குழந்தைகளுக்கான நடைபயிற்சி உபகரணம், மடக்கு ஊன்றுகோல், பிரெய்லி கைக்கடிகாரம், கருப்புக்கண்ணாடி, உருப்பெருக்கி கருவிகள், காதொலி கருவிகள், கைதாங்கிகள், செயற்கை அவயங்கள், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம், ஊன்றுகோல், மடக்கு சக்கர நாற்காலி, ஆரம்ப நிலையிலேயே உடல் இயக்கக் குறைபாடுடைய 0 முதல் 3 வயது குழந்தைகளுக்கான அமரும் நாற்காலி ஆகியவவை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்காணும் உதவி உபகரணங்களை தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விலையில்லாமல் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்


Post a Comment

0 Comments