கோட்டைப்பட்டினத்தில் மீனவர் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த ஆலோசனை கூட்டம் கோட்டைப்பட்டினம் பல்நோக்கு பேரிடர் கட்டிடத்தில் நடைபெற்றது.
இதற்கு அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் தலைமை தாங்கி பேசுகையில் இப்பகுதியில் மீன்வளத்துறையின் சார்பாக மீனவ சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் பெண்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக கடல்பாசி வளர்ப்பு, மிதவை கூண்டு மூலம் மீன் வளர்த்தல், வலை பின்னுதல், மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய் எவ்வாறு செய்வது மற்றும் இப்பகுதியில் கிடைக்கும் மீன், இறால், நண்டு, போன்றவற்றை வெளி நாடுகளுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்வது, மீனவ இளைஞர்கள் கடல்படையில் எவ்வாறு சேர்வது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திறன் மேம்பாட்டு பயிற்சியான வெல்டிங், பிட்டர், படகு எஞ்சின் மெக்கானிக் போன்ற பயிற்சிகள் நடத்த மீன்வளத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
அதனால் இப்பகுதியில் உள்ள மீனவ சமுதாயதை சேர்ந்த இளைஞர்கள் இது போன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு தங்கள் திறனை வளர்ப்பதோடு சமுதாயத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் திறன் மேம்பாட்டு உதவி இயக்குனர் குமரேசன், மணமேல்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ், மீன்வளத்துறை மேற்பார்வையாளர்கள் சதீஷ், செல்வேந்திரன் வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அதிகாரி கவியரசன், ஊராட்சி துணை தலைவர் அக்பர் அலி மற்றும் மீனவ சங்க நிர்வாகிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.