அறந்தாங்கி வனத்தோட்ட கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.!புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு வனத்தோட்ட மண்டல மேலாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தை அறந்தாங்கி வனத்தோட்ட கண்காணிப்பாளர் வள்ளிகண்ணுவிடம் இருந்து கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.


Post a Comment

0 Comments