மணமேல்குடி, ஆவுடையார்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!தேசிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு கொள்கை, மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், விவசாய பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணமேல்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமநாதன் தலைமை தாங்கினார். மணமேல்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவில் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழு சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் முருகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.Post a Comment

0 Comments