புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான படகில் காரைக்குடி பகுதியை சேர்ந்த கணேசன்(வயது 45) மற்றும் சபரிநாதன் (40), பழனிசாமி (42) ஆகிய 3 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் சுமார் 10 நாட்டிகல் தொலைவில் கடலில் மீன்பிடித்தபோது, வலையில் உள்ள இரும்பு உருளை(கப்பி), மீனவர் கணேசன் மீது விழுந்தது. இதில் அவர் மயக்கம் அடைந்தார். இது குறித்து சக மீனவர்கள், மீனவ சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு அவருடன் கரை திரும்பினர்.
கரைக்கு வந்த பின்னர் மீனவர் கணேசனை, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சோதித்து பார்த்து, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் குழுமத்தினர் அங்கு வந்து, கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீன்பிடிக்க சென்ற மீனவர் இரும்பு உருளை தாக்கி இறந்த சம்பவம் கோட்டைப்பட்டினம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.