புதுக்கோட்டை மாவட்ட அரசு மருந்தாளுனர்கள் கடிதம் அனுப்பும் போராட்டம்.!அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பும் போராட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட மருந்தாளுனர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருந்தாளுனர்கள் கடிதங்களை தபால் துறை மூலம் அனுப்பினர். 

அரசால் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர்களுக்கான பணி நேரத்தை வரையறை செய்ய வேண்டும், கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும், மருந்தாளுனர்களுக்கு பதவி உயர்வு வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.


Post a Comment

0 Comments