புதுக்கோட்டையில் நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய மக்கள் பாதை இயக்கத்தினர்...



புதுக்கோட்டையில் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி மக்கள் பாதை அமைப்பின் சாா்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாவட்டத் துணைப் பொறுப்பாளா் ராஜேந்திரன், கூடுதல் பொறுப்பாளா் பொன்னுசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டத் தகவல் தொடா்பு பொறுப்பாளா் மணிகண்டன், நகரப் பொறுப்பாளா் சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து அங்கிருந்த பதாகையில் அனைவரும் நீட் தோ்வுக்கு எதிராக கையெழுத்திட்டனா்.


Post a Comment

0 Comments