புதுக்கோட்டையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பம்.! மாவட்ட ஆட்சியர் தகவல்.!பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளி தமிழக அரசால் புதுக்கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி சார்ந்த அனைத்தும் முற்றிலும் இலவசமாகும்.

பள்ளியில் இலவச விடுதியுடன் கூடிய சிறப்புப்பள்ளி, கற்பிக்க சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், குழந்தைகளை பராமரிக்க விடுதிக்காப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். 

உணவு, உடை, தங்கும் வசதி முற்றிலும் இலவசம். ஆண்டுக்கு ஒரு முறை கல்விச்சுற்றுலா, சிறப்பு கல்வி உதவித்தொகை பெறலாம். மேலும் மாணவர்களை பள்ளியில் சேர்க்க புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அடுத்து உள்ள பார்வையற்றோர் அரசு நடுநிலைப்பள்ளியை தொடர்பு கொள்ளலாம். 

மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேலனை 90808 55199, 98402 72383 என்ற செல்போன் எண்ணிலும், அலுவலகத்தை 04322 226452 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments