கோட்டைப்பட்டினத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.!



கோட்டைப்பட்டினத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட வழங்கல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை துணை தாசில்தார் செந்தில்குமார், மணமேல்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ், வட்ட வழங்கல் அலுவலர் ஹென்றி, வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் கவியரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கோட்டைப்பட்டினம் வடக்குத் தெருவை சேர்ந்த சேக்முகம்மது என்பவர் வீட்டில் சோதனை நடத்தியபோது, மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் சேக் முகம்மது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். முதல் கட்ட விசாரணையில் வெளியூர்களுக்கு கடத்தி செல்வதற்காக அந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

பின்னர் அங்கிருந்த 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மணமேல்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

0 Comments