ஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.!ஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

ஆவுடையார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் பழனிவேலு (வயது 65) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மண்பானையில் சாராய ஊறல் வைத்திருந்தார். போலீசார் அதனை கைப்பற்றி அழித்தனர். பின்னர் பழனிவேலுவை கைது செய்தனர்.


Post a Comment

0 Comments