புதுக்கோட்டையில் வருகிற 29-ந் தேதி கேஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைகேட்பு முகாம்..! மாவட்ட ஆட்சியர் தகவல்.!புதுக்கோட்டை மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் குறைகளை தீர்க்கும் வகையில், நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வந்தது.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. தற்போது ஊரடங்கில் இருந்து பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 6 மதாங்களுக்கு பிறகு இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர், தங்களுக்கு சிலிண்டர் நிரப்புவதில், பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு குறைகளை மனுக்கள் மூலமாகவோ அல்லது மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு நேரடியாகவோ தெரிவிக்கலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments