ஆதனக்கோட்டையை சேர்ந்த ஏழை பெண்ணுக்கு உதவிய போலீசார்.!ஆதனக்கோட்டையை சேர்ந்தவர் முனியம்மாள்(வயது 53). திருமணமாகாத இவர் ஏழ்மையான நிலையில் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் வீட்டின் மேற்கூரை மிகவும் பழுதடைந்து இருந்தது. இதனால், மழையிலும், வெயிலிலும் கடும் சிரமத்தை சந்தித்து வந்தார்.

இதுகுறித்து அறிந்த புதுக்கோட்டை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பங்களிப்பின் மூலம் பழுதடைந்த கட்டிடத்தின் மேற்கூரையை புதிதாக மாற்றிக் கொடுத்ததோடு, அந்த பெண்ணுக்கு உடைகள் மற்றும் போர்வை உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினர். 

பெண்ணுக்கு உதவிய போலீசாரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments