கந்தர்வகோட்டை மாணவர் தேசிய அளவிலான கபடி போட்டிக்கு தேர்வு.!தேசிய அளவிலான கபடி போட்டியில் விளையாட சென்னையில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழக அளவில் 70 பேர் பங்கேற்ற நிலையில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த 10 பேரில் முதல் நபராக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் கிஷோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாணவரை இளைஞர் பயிற்சி பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தத்தெடுத்துக் கொண்டு இனிவரும் காலங்களில் இவரது கல்வி செலவு அனைத்தையும் இளைஞர் பயிற்சி பள்ளி ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார். 

இது கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளதாக பள்ளியின் ஆசிரியர்கள் கூறினார்கள். மேலும் தேசிய அளவிலான கபடிபோட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட கிஷோரை பாராட்டினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments