அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைகாக 70 படுக்கை வசதிகள் கொண்டு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்டிலேட்டர் வசதியுடன் 6 படுக்கை வசதிகள் உள்ளது. தொற்று உள்ள நபர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகாத வண்ணம் இருப்பதற்காக மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் மூலம் மனநல ஆலோசனைகளும் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.
மேலும் நாளிதழ்கள், தொலைக்காட்சி, கேரம், செஸ் போன்ற விளையாட்டு சாதனங்கள் வழங்கப்பட்டு யோகா, பிசியோதெரபி வழங்கி புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் பகுதியை நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மரியலூயிஸ் பெக்கி கோமஸ் ஆய்வு செய்து சிகிச்சை வழங்கப்படும் முறை பற்றி மருத்துவமணை தலைமை மருத்துவர் சேகரிடம் கேட்டறிந்தார்.
நேற்று வரைக்கு அறந்தாங்கியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 544 பேருக்கு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். இதில் 87 பேருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்த உள்ள உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.