புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் அவசர கால உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணி இடங்களுக்கான நேர்முகத்தேர்வு.!108 ஆம்புலன்ஸ் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு வருகிற 3, 4-ந் தேதிகளில் நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் அவசர கால உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணி இடங்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 3, 4-ந் தேதிகளில் இலுப்பூரில் மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா கல்லூரியில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் தேர்வு பெற்றவர்கள் தமிழகத்தில் எந்தப்பகுதியிலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

12 மணி நேரம் இரவு, பகல் என சுழற்சிமுறையில் பணியாற்ற வேண்டும். தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும். மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்.சி. மற்றும் டி.ஜி.என்.எம், நர்சிங், பி.எஸ்.சி. அல்லது எம்.எஸ்.சி. தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பயோடெக், வேதியியல் படித்திருக்க வேண்டும். 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மருத்துவ உதவி பயிற்சியாளர்களுக்கு எழுத்து தேர்வு மருத்துவ நேர்முக உடற்கூறியல், முதலுதவி பணி தொடர்பாகவும், மனிதவள துறையின் நேர்முக தேர்வுகளும் நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50 நாட்கள் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்படும். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.

மருத்துவ உதவியாளர் சம்பளம் ரூ.13,760 ஆகும். ஓட்டுனர் பணியிடத்திற்கு ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 24 வயதிற்கு மேலும் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ-க்கு குறையாமல் இருக்க வேண்டும். 

இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டு முடித்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சம்பளம் ரூ.13, 265 ஆகும். மேலும் விவரங்களுக்கு 73977 01807 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments