கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்கா கந்தூரி விழாவில் கூட்டம் கூட தடை.!புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்டம், மணமேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டினம் ராவுத்தர் சாகிப் வலியுல்லா தர்ஹாவில் வருடாந்திர கந்தூரி விழா நடப்பு ஆண்டில் கடந்த 22.09.2020 அன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ள நிலையில் 02.10.2020 இரவு முதல் 03.10.2020 அதிகாலை வரை நடக்கவுள்ள சந்தனக்கூடு மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி ஆகியவை ஜமாத் கமிட்டி நிர்வாகிகளால் மட்டும் உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விழாவினை முன்னிட்டு தற்காலிக கடைகள் ஏதும் அமைக்க அனுமதி இல்லை. வான வேடிக்கை உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொள்ளக்கூடிய வேறு நிகழச்சிகள் ஏதும் நடைபெறாது. 

எனவே, வெளியூர் மற்றும் உள்ளூர் களிலிருந்து இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் பேருந்துகளில் பொதுமக்கள் யாரும் மேற்படி கந்தூரி விழாவிற்கு வருகை தந்து கூட்டம் கூடுவதை தவிர்க்கும் அறிவிக்கப்படுகிறது. 

பொதுமக்கள் கோவிட் தொற்றிலிருந்து தங்களது உடல் நலத்தை பாதுகாக்கவும் கோவிட் தொற்று பிறருக்கு பரவுவதை தவிர்க்கவும் ஏதுவாக கூட்டம் கூடுவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments