பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலையை கண்டித்து கோபாலப்பட்டிணம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம்.!கோபாலப்பட்டிணம் ஜுமுஆ பள்ளிவாசல் முன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபரி மஸ்ஜித் இடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை கண்டித்து இன்று 02/10/2010 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிவாசல்களுக்கு முன்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பதாகைகளை ஏந்தி கோஷமிட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஜுமுஆ மஸ்ஜித் பள்ளியின் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் தலைவர் ஹனீபா தலைமையில் நடைபெற்றது. 

SDPI கட்சியின் துணை செயலாளர் ஜின்னா உட்பட பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என அனைவர்களும் கலந்துகொண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளின் விடுதலையை கண்டித்தும், நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை போய்விடும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments