மணமேல்குடி அருகே கடலில் தத்தளித்த நம்புதாளை பகுதியை சேர்ந்த மீனவர் மீட்பு.!ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த நம்புதாளை பகுதியை சேர்ந்தவர் நாகூர். இவரது நாட்டுப்படகில் 8 பேர் கொண்ட குழுவினர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்தநிலையில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, தொண்டீஸ்வரன் என்பவர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார்.

சக மீனவர்கள் தேடியும் தொண்டீஸ்வரன் கிடைக்கவில்லை. உடனே மீனவர்கள் தொண்டி கடற்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் படகில் கடலுக்குள் சென்று தேடிவந்தனர். 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கடலோர போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 8 நாட்டிகல் மைல் தொலைவில் தொண்டீஸ்வரன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

இதையடுத்து மணமேல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான போலீசார் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தொண்டீஸ்வரனை மீட்டு படகு மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர் மணல்மேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து தொண்டி கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments