கோட்டைப்பட்டினம் அருகே கரை பகுதியில் மீன்பிடித்த விசைப்படகு பறிமுதல்.!



கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் விசைப்படகு மூலம் கரை பகுதியில் மீன்பிடிப்பதாக மீன்வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கடல் அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், கடலோர காவல் குழுமம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், மீன்வளத்துறை சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் மீன்வள மேற்பார்வையாளர் செல்வேந்திரன், சதீஷ் ஆகியோர் ரோந்து படகு மூலம் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். 

அப்போது புதுப்பட்டினம் மீனவ கிராமத்தில் 2 கடல் மைல் தொலைவில் கரை பகுதியில் ராமநாதபுரம் மாவட்டம் சோழியக்குடி பகுதியை சேர்ந்த விசைப்படகு ஒன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தது. அங்கு சென்ற அதிகாரிகள் விசைப்படகு மூலம் 5 மைல் தூரத்தை தாண்டி தான் மீன்பிடிக்க வேண்டும் என்று விதி இருக்கும் போது, 2 மைல் தொலைவில் மீன் பிடித்ததாக கூறி அந்த விசைப்படகை பறிமுதல் செய்து, அதில் இருந்த 6 மீனவர்களையும் அழைத்துக் கொண்டு கோட்டைப்பட்டினம் மீன்பிடிதளத்திற்கு வந்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments