புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நூதன போராட்டம்.!மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், அந்த சட்டங்களை திரும்ப பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் புதிய சட்டங்களுக்கு எதிராக புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நூதன போராட்டம் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் நேற்று நடைபெற்றது. காய்கறிகளை மாலைகளாக அணிந்தும், விவசாய விளைபொருட்களை கையில் ஏந்தியபடியும், நெல் உள்ளிட்ட தானியவகைகளையும் ஊர்வலமாக எடுத்து வந்து கீழ ராஜ வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருப்பு வைக்க முயன்றனர். 

புதிய சட்டங்களால் விலைவாசி உயரும் எனவும், அதனால் விவசாய விளைபொருட்களை வங்கியில் இருப்பு வைத்து பாதுகாத்து தரவேண்டும் என கோரி, உழவு ஏரில் ஒருவரை தொங்கவிட்டு தூக்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

வங்கியின் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டாக்காரர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டக்காரர்கள் திரும்பி சென்றனர். இந்த போராட்டத்தினால் கீழ ராஜ வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments