புதுக்கோட்டையில் ரூ.27 லட்சம் கஞ்சா கடத்தல் வழக்கு: மேலும் 5 பேர் கைது.!ரூ.27 லட்சம் கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டையில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் ஆரோக்கியதாஸ் என்பவரை கடந்த 29-ந் தேதி திருக்கோகர்ணம் அருகே போலீசார் கைது செய்திருந்தனர். மேலும் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ கஞ்சா மற்றும் கார், செல்போனை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தப்பியோடிய மணமேல்குடியை சேர்ந்த ரமேஷ் (வயது38) என்பவரையும், கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் தேடி வந்தனர். மேலும் இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் ரமேஷ், அறந்தாங்கியை சேர்ந்த சகுந்தலா (32) , அரிமளத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (22) மற்றும் ஏற்கனவே கைதான ஆரோக்கியதாசின் மனைவி சிவகாமி (40) , அவரது மகன் ஆனந்த் (22) ஆகிய 5 பேரையும் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 1 கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments