வடகாட்டில் இயற்கை முறையில் மிளகு சாகுபடியில் ஈடுபடும் ஆசிரியர்.!



வடகாடு தெற்குபட்டியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் அருகேயுள்ள மாங்காடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இயற்கை ஆர்வலரான இவர், மனைவி முத்துலட்சுமி உதவியுடன் மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய மிளகு செடிகளை சமவெளியில் கூட விளைவிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார். 

இந்த தம்பதி தங்களது வீட்டை சுற்றியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் கிழுவை மரங்களை நட்டு அதன்மீது மிளகு செடிகளை படரவிட்டு வளர்த்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிளகு செடிகளை நட்டு பராமரித்து வரும் இவர்கள் மாட்டுச்சாணம், கோமியம், மீன் கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை முறையில் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை தாங்களே தயார் செய்து மிளகு செடிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். 

கஜா புயலுக்கு முன்பு 500 கிலோ வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது, 100 கிலோ முதல் 150 கிலோ மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக கூறுகின்றனர். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments