அறந்தாங்கி காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்.!அறந்தாங்கி போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயசீலன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், போலீசார் மற்றும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

ஊர்வலம் பட்டுக்கோட்டை சாலை, கட்டுமாவடி முக்கம், எம்.ஜி.ஆர். சிலை வழியாக சென்று புதுக்கோட்டை சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே நிறைவு பெற்றது. இதில், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments