அறந்தாங்கி அருகே மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை.! புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு.!!சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கூகனூர் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி. இவரை அதே பகுதியை சேர்ந்த கருப்பையா என்கிற தங்கராஜ் (வயது25) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததும் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து போலீசார் தங்கராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர்.சத்யா நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மேலும் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். 

இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments