அறந்தாங்கியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது.!அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் குளத்துகரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் தலைமையிலான போலீசார்அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அறந்தாங்கி கோட்டை 4-ம் வீதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். 

போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்து இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments