அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை, பனை விதைகள் நடவு மற்றும் கொடியேற்ற நிகழ்வு.!அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை, பனைவிதை நடவு மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் கடந்த மூன்று நாட்களாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அறந்தாங்கி தொகுதியின் நகர ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் 330 உறுப்பினர்கள் புதிதாக இணைத்து கொண்டனர்.வீரத்தமிழர் முன்னணி, சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பனை விதை நடவு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடப்பட்டன.

மேலும் ஆவுடையார்கோவில் ஒன்றிய கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் 20 இடங்களில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் மு.இ ஹிமாயுன் கபீர் கலந்து கொண்டார். 
இதில் கலந்து கொண்ட மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, ஊராட்சி நாம் நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அறந்தாங்கி சட்டமன்ற நாம் தமிழர் உறவுகளின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. 

தகவல்:
நாம் தமிழர் கட்சி 
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments