கறம்பக்குடி TNTJ கிளை சார்பில் இரத்ததான முகாம்.!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளை சார்பாக மக்களின் உயிர்காக்கும் வகையில் 7/10/2020 நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கறம்பக்குடி கிளையும் மழையூர் மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து கறம்பக்குடி அரசு மருத்துமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் முகம்மது மீரான் அவர்கள் துவங்கி வைத்தார்கள். சிறப்பு அழைப்பாளராக வட்டாச்சியர் N.ஷேக் அப்துல்லா கலந்து கொண்டார். இதில் கறம்பக்குடி கிளை நிர்வாகிகள் ஜகுபர் அலி,ஜாபிர்,யாசீன்,பகுர்தீன், இக்பால்,ஜலில் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்   இரத்தகொடையாளர்கள் ஆர்வ த்துடன் கலந்து கொண்டு 29 யூனிட் இரத்ததை தானமாக வழங்கினார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments