புதுக்கோட்டையில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாமனார்-மாமியார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மண்டேலா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா (33). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்குதிருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லை.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. மேலும் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கோகிலாவிடம் ரூ.1 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகை உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த கோகிலா புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, செந்தில்குமார், அவரது தந்தை கருணாநிதி, தாயார் ஜகதீஸ்வரி மற்றும் அவரது உறவினர்களான சுகுணா, தங்கராஜ், தினேஷ் கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கணவர் செந்தில்குமாரை கைது செய்தார். அதை தொடர்ந்து செந்தில்குமாரை கூடுதல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.