புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இயற்கை முறை காய்கறி விவசாயத்திற்கு ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்...



புதுக்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மா.கார்த்திக் பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இயற்கையான முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ஊக்கத்தொகையானது தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒரு எக்டேருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகையாக பெறலாம். 

மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒரு எக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகையாகவும், கத்தரி, தக்காளி, வெண்டை மற்றும் கொடிவகை காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் 1 எக்டேருக்கு ரூ.3,750 ஊக்கத்தொகையாகவும் பெறலாம். இதுதவிர இயற்கையான முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்ககச் சான்று பெறுவதற்காக தனியாகவோ அல்லது குழுவாகவோ விண்ணப்பிக்கலாம். 

இந்த அங்ககச்சான்று பெற ஒரு விவசாயிக்கு ரூ.500 மானியமாக வழங்கப்படுகிறது. மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுடைய புகைப்படம், கணினி சிட்டா, நிலவரை படம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல், இயற்கை பண்ணையின் சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments