மாட்டுவண்டிக்கு என தனி மணல் குவாரி அமைக்க கோரிக்கை




உழவு வேலைக்காக 99 சதவிகிதம் டிராக்டரையே தான் தற்போது  விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயத்திற்காக நாட்டுமாடுகள் பயன்பாடு என்பது கிட்டத்தட்ட அருதாகி விட்டது. ஜல்லிக்கட்டு களைகளுக்காக நாட்டுமாடுகள் ஒருசில இடங்களில் வளர்க்கப்படுகிறது. 

இதைத்தவிர மணல் மாட்டுவண்டித் தொழிலில் ஈடுபடுவோர் மட்டுமே நாட்டுமாடுகளைப் பயன்படுத்தி வருகின்றனர் ஆனால் மணல் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் படுகிறபாடு சொல்லி மாளாது. பொதுவாக மணல் குவாரி அமைத்து லாரிகளில் ஏற்றுமதி செய்வோர் பெரும்பாலும் வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது. மாட்டுவண்டிகளில் அள்ளப்படும் மணல் அனைத்தும் மாவட்டத்திற்குள் அந்தந்தப் பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

தற்பொழுது மாவட்டத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் லாரிகளில் ஏற்றி கொள்ளை லாபம் ஈட்டும் மணல் மாஃபியாக்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆனால்  மாட்டுவண்டிகளில் மணல் எடுக்கும் ஏழைத் தொழிலாளர்களை அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதமும் வசூலிக்கப்படுகிறது மாவட்டத்தில் புதுக்கோட்டை கறம்பக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் மாட்டுவண்டிகள் சிறைப்பிடிக்பட்டு தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்கின்றனர்.


 கல்குவாரிகளை கைவசயம் வைத்துள்ள அரசியல் பலமும், அதிகார பலமும் உள்ளவர்கள் எம்.சாண்ட் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கிலேயே மணல் குவாரிக்கான அனுமதி மறுக்கப்படுகிறது. பெருமளவில் நடைபெறும் மணல்கொள்ளையால் இயற்கை வளம் பாதிக்கப்படும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. 

அதே நேரத்தில், மாட்டுவண்டியில் சிறிய அளவில் மணல் அள்ளுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படப் போவதில்லை மேலும், அந்த பகுதியில் உள்ள மக்களின் கட்டுமானப் பணிக்கே மாட்டுவண்டியில் அள்ளப்படும் மணல் பயன்படுத்தப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டுவண்டிக்கு என தனி மணல் குவாரிகள் அமைக்க வேண்டும் என மாட்டுவண்டி தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments