மணமேல்குடி ஒன்றியம் நெற்குப்பம் ஊராட்சியில் ஆழ்குழாய் அமைக்கும் பணி தொடக்கம்.!மணமேல்குடி ஒன்றியம், நெற்குப்பம் ஊராட்சி கீழ்கரை கிராமத்தில் ரூ23 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட உள்ளது.

இந்த பணியினை தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், மணமேல்குடி ஒன்றிய குழுத்தலைவருமான பரணி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிபெரியகருப்பன், நெற்குப்பம் ஊராட்சி மன்றத்தலைவர் யோகமங்கலம் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments