ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் பொருட்கள் விற்றால் நடவடிக்கை... புதுகை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை.!!



தரக்கட்டுப்பாட்டு முத்திரையில்லாத பொருட்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள், மொத்த மற்றும் சில்லரை விற்பனையகங்கள், சேமிப்பு கிடங்குகள் ஆகியவை எவ்வித முன்னறிவிப்புமின்றி மாவட்ட தொழில் மைய அலுவலர்களால் திடீரென ஆய்வு நடத்தப்படும். அப்போது உற்பத்தியாளர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படும்.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட தர அளவின்படி இல்லாத மின்சாதனப் பொருட்கள் மற்றும் எண்ணெய் அழுத்த அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்யவும், உற்பத்தியாளர்களுக்கான தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் மேற்கொள்வதற்கும் புதுக்கோட்டை மாவட்ட தொழில் மைய மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பான நிறுவனங்கள் இந்திய தரக்கட்டுப்பாட்டு முத்திரை பெற்ற பொருட்களை மட்டுமே உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments